OOSAI RADIO

Post

Share this post

பில்லி சூனியம் செய்த 110 பேர் படுகொலை

இந்தியாவின் தெலுக்காண மாகாணத்தில் பில்லி சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 110 பேரை ஹைட்டி ஆயுதக் கும்பல் ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர்.

ஹைட்டியின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள ஒரு சேரியில் குறைந்தது 110 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உள்ளூர் ஆயுதக் கும்பல் ஒன்றின் தலைவனான மிகானோவின் (மோனல் பெலிக்ஸ்) மகன் நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து இவர்கள் குறிவைக்கப்பட்டனர்.

மகனின் நோய்க்கு சூனியம் செய்யும் வயதான உள்ளூர்வாசிகளைக் குற்றம் சாட்டி கும்பலின் தலைவன் பாதிரியார் ஒருவரிடம் ஆலோசனைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஹைட்டியில் இந்த ஆண்டு இதுவரை பரவி வரும் ஆயுதக் கும்பல்களின் வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் 5,000 வரை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஹைட்டிய தலைநகரின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் விவ் அன்சன்ம் கும்பல் கூட்டணியின் ஒரு பகுதியாக இந்தக் குழு உள்ளது.

Leave a comment

Type and hit enter