OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் மருந்து இறக்குமதியில் சரிவு!

இலங்கையில் கடந்த ஆண்டு சுமார் 2,000 எண்ணிக்கையிலான மருந்துகள், இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வெறும் 750 ஆக குறைந்துள்ளது.

இது, 62.5% குறைப்பைக் குறிக்கிறது. அதிகாரிகள் உரிய கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதால், மருந்துகளை பெறுவதில் தாமதம் ஏற்படுவதே, இதற்கு காரணமாகும்.

கொள்முதல் குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரிகள் நடைமுறை முடிவுகளை எடுக்கத் தயங்கி வருகின்றனர்.

எனினும், மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டபடி, தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை சமாளிக்கக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும், கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, காணப்பட்ட மோசமான நிலைமையை, மருந்துப் பற்றாக்குறை இன்னும் எட்டவில்லை.

இந்தநிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter