Viral Video – ராஜ நாகத்தை முத்தமிட்ட நபர்!
![](https://oosai.lk/wp-content/uploads/2024/12/Snak-586x365.jpg)
https://www.instagram.com/reel/DDhaDVTNrHs/?utm_source=ig_web_copy_link
நாரொருவர் கொடிய விஷத்தன்மை கொண்ட ராஜ நாகத்தை துளியும் அச்சமின்றி முத்தமிடும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகள் என்றால் மனிதர்களுக்கு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம். அதிலும் ராஜ நாகம் என்றால் சொல்லவும் வேண்டுமா?பெயரை கேட்டாலே பதறியடித்துக்கொண்டு ஓடுபவர்களும் இருக்கின்றார்கள்.
காரணம் ராஜ நாகம் அதிக விஷத்தன்மை கொண்டவையாகும்.இவை ஒரு தடவையில் வெளியேற்றும் விஷத்தை கொண்டு சுமார் 20 பேரை கொல்ல முடியும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
இந்தளவுக்கு நச்சுத்தன்மை கொண்ட ராஜ நாகத்தை கொஞ்சமும் அச்சமின்றி நபரொருவர் முத்தமிடும் காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.