சீனாவில் அதிகரித்துள்ள HMPV வைரஸ் தாக்கம்!
கொவிட் தொற்றை ஒத்ததாக வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்றுதற்போது சீனாவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எச்எம்பிவி (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு போன்ற நோய் தாக்கங்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனா அதிக பாதிப்படைந்நுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த தாக்கங்களால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.