9,652 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு
மியான்மா் சுதந்திர தினத்தையொட்டி, அந்த நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 9,652 கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி தொலைக்காட்சி வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 9,652 சிறைக் கைதிகளுக்கு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாா். அத்துடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 114 வெளிநாட்டினரையும் விடுதலை செய்ய அவா் உத்தரவிட்டுள்ளாா் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.
எனினும், ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி, அதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவா்களில் அடங்குவாா்களா என்பதை அந்தத் தொலைக்காட்சி தெரிவிக்கவில்லை.