Biggboss வெற்றி மாயா & அர்ச்சனா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய இரண்டு பிரபலங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில், டைட்டிலை அடிக்கப் போவது யார்? என்ற பல கேள்விகளுடனும், எதிர்பார்ப்புடனும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
இதுவரை ஒளிபரப்பாகி இருக்கும் ஆறு சீசன்களிலும் ஒரே ஒரு முறை மட்டும் தான் பெண் போட்டியாளர் டைட்டில் பட்டதை விட்டிருக்கிறார். அதுவும் இரண்டாவது சீசனில் ரித்விகா பெற்றிருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை மாயா அல்லது அர்ச்சனா வென்றெடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இதற்காக பிஆர் ஒர்க் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், இந்த வேலையை மாயாவுக்கு அவருடைய குடும்பத்தினரும், அர்ச்சனாவுக்காக சீனியர் சினிமா நடிகர் ஒருவருடைய மகளும் வேலை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.