கடனை செலுத்த முடியாத உயிரை மாய்த்த 200 பெண்கள்
கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நிதிக் கடன் விவகாரம் மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம் கடன் மற்றும் நுண்கடன் வணிகங்களை ஒழுங்குபடுத்துவது மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதாகும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக மத்திய திறைசேரி, மத்திய வங்கி மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் அதிகாரபூர்வமாக நியமிக்கப்படவுள்ளார்.