OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சில புதிய வாகனங்களைக் இறக்குமதி செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய ரக வாகனங்கள் அரச நிறுவனங்களின் கள நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றுக்கு முறையே புதிய எஸ்யூவி மற்றும் டபுள் கேப் பிக்கப் டிரக் ஆகிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் கடற்படைக்கு இரண்டு புதிய பேருந்துகளும், தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் இற்கு மூன்று “அதி சொகுசு பேருந்துகளையும்” இறக்குமதி செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter