கஜகேசரி யோக அதிர்ஷடம் பெறும் இராசிக்காரர்கள்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் தங்களுடைய இயக்கங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையில் ஒரு கிரகத்தின் மாற்றம் பன்னிரண்டு இராசிகளையும் பாதிக்கும்.
அது நன்மையாகவும் அமையும் தீமையாகவும் அமையலாம். அந்த வகையில் எதிர்வரும் (18.01.2024) ஆம் திகதி சந்திரன் மேஷ இராசிக்குள் நுழைய உள்ளார்.
ஏற்கனவே மேஷ ராசியில் வியாழனும் உள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் ஜோதிடத்தில் மங்களகரமான யோகம் என்று சொல்லப்படும் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகமானது 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவிருக்கிறது.
மேஷம் – இந்த கஜகேசரி யோகத்தால் மங்களகரமான நல்ல பலன்களை பெறக் கூடிய ராசியில் மேஷ ராசி உள்ளது. இந்த ராசியில் கொட்டிக் பறக்கக் கூடிய குருவும் சந்திரனும் ஒன்றாக இணையப் போகிறார்கள். இதனால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது. இந்த யோகத்தால் இவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் மூலம் வருமானம் பெருகும் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.
மகரம் – குரு சந்திரனின் இந்த செயற்கையால் மகர ராசிக்காரர்களுக்கும் இந்த கஜகேசரி யோகம் அமைந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடையப் போகிறார்கள். செல்வ செழிப்புடன் வாழக் கூடிய காலம் இது. திடீர் பணவரவு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணலாம். இதுவரை இருந்த தடைகள் நீங்கி அனைத்திலும் வெற்றிகளை குவிக்க கூடிய காலமாக அமையும்.
மீனம் – மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் இருந்தாலும் கஜகேசரி யோகம் சில சாதகமான பலன்களை தர உள்ளது. அந்த வகையில் பொருளாதாரத்தில் திட்டமிட்டபடி நடக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொடங்கும் காரியங்களில் முழு முயற்சியை செலுத்தினால் நிச்சயம் வெற்றி அடையலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இது வரை இருந்து வந்த பதட்டமான சூழ்நிலை மாறி தெளிவான சிந்தனையுடன் இருப்பீர்கள்.