நான்காம் தசம யோகம் – யாருக்கு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் அவ்வப்போது தங்களுடைய இடத்தை மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கும்.
இதனால் சுப மற்றும் அசுப யோகங்கள் ஒவ்வொரு இராசிக்காரருக்கும் உருவாகும். அந்த வகையில் ஜோதிடத்தில் மிக முக்கியமாக கருதப்படும் நான்காம் தசம் யோகம் தற்போது உருவாகி இருக்கிறது. இந்த நான்காம் தசம யோகமானது (15.01.2024) அன்று சந்திரன் மீன இராசிக்குள் நுழைந்துள்ளார்.
அதே நேரத்தில் சூரியன் மகர இராசியில் நுழைந்துள்ளார். இந்த காலக் கட்டத்தில் சூரியனும் வியாழனும் ஒருவருக்கொருவர் நான்கு மற்றும் பத்தாம் வீடுகளில் இருப்பார்கள். இது சூரியன் வியாழனின் நான்காம் தசம யோகமாக உருவாகிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இந்த கிரக மாற்றம் ஜோதிடத்தில் மிக முக்கிய பலனாக கருதப்படுகிறது. அதற்கான நற்பலனை சில ராசிகள் பெறுகிறார்கள். யார் அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
நான்காம் தசம் யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறக்கூடிய இராசிக்காரர்கள்.
மேஷம் – மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றமானது பல நல்ல பலன்களை தர உள்ளது. இவர்களின் பணி சிறப்புற அமையும்.
இலாபத்திற்காக இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெறுவார்கள். சொத்து வாகனங்கள் வாங்க முடிவு செய்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். பணியிடத்தில் சிறந்து விளங்கி அங்கும் நல் மதிப்பு பெறலாம். திருமணம் ஆனவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
கன்னி – நான்காம் தசம யோகம் கன்னி இராசிக்காரர்களுக்கு பல சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தப்படுகிறது. இந்த காலத்தில் வருமானத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் பெருகும். முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சிறந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். கல்வி ஆரோக்கியம் குடும்பம் என அனைத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.
மகரம் – நான்காம் தசம யோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் மகர இராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவிருக்கிறது.
இந்த யோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும் அதற்கான லாபத்தையும் பெறுவீர்கள். சொந்த தொழில் கூட்டு தொழில் ஈடுபடுபவர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறலாம். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசக்கூடிய காலமிது. வெளிநாடு செல்ல யோசிப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அமையும். மங்களகரமான விஷயங்கள் நடக்கக் கூடிய காலம் இது.