மின்சாரம் தடைப்படும் சாத்தியம்?
கனடாவில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது.
வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் காரணமாக அதிகளவான மின்சாரம் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலையின் மாற்றத்தினால் மக்கள் அதிகளவு மின்சாரத்தை பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும் இது நெருக்கடிகளை உருவாக்கும் எனவும் தேரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய சில ஆண்டுகளாகவே இவ்வாற மின்சாரத்திற்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.