எச்சரிக்கை – பாவனைக்கு உதவாத அரிசி!
மனித பாவனைக்கு ஒவ்வாத 32 அரிசி கொள்கலன்களை துறைமுகத்தலிருந்து விடுவிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கால்நடைகளுக்கான உணவுக்காக அதனை பயன்படுத்தவுள்ளதாகக் கூறி சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் குறித்த அரிசி கொள்கலன்களை விடுவிடுவிக்க திட்டமிட்டுள்ளதாக அந்த இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறித்த அனுமதியை வழங்குவது குறித்த தீர்மானித்தை எடுப்பதற்காக நுகர்வோர் அதிகார சபையின் குழு இன்றைய தினம் கூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.