OOSAI RADIO

Post

Share this post

அவுஸ்திரேலியாவில் கோல்டன் விசா திட்டம் ரத்து!

அவுஸ்திரேலிய அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் நோக்கம், அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு நிரந்தரமாக அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதாகும்.

இதன் மூலம் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும் என அவுஸ்திரேலியா எதிர்ப்பார்த்தது. ஆனால், அவுஸ்திரேலியா நினைத்தபடி இந்த கோல்டன் விசா திட்டம் அவுஸ்திரேலியா நாட்டிற்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அளவில் உதவவில்லை. இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்குப் பதிலாக திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கு அதிக அளவில் விசா வழங்க கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் முதலீடு செய்தால், அவுஸ்திரேலியாவில் ஐந்து ஆண்டுகள் வரை தங்கியிருக்க முடியும். வெளிநாட்டைச் சேர்ந்த அதிகமான முதலீட்டார்களை ஈர்ப்பதற்கான இந்த திட்டத்தை அவுஸ்திரேலியா கொண்டுவந்துள்ளது. கான்பெர்ரா ஆயிரக்கணக்கான கோல்டன் விசாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் 85 சதவீதம் சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.

ஆனால் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக பணத்தை வைக்கவும், பணமோசடியில் ஈடுபடுவதற்கும், பணம் தொடர்பான பிற மோசடிகளுக்கும் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2016ஆல் நடத்தப்பட்ட ஆய்விலும் இது தெரியவந்தது.

Leave a comment

Type and hit enter