OOSAI RADIO

Post

Share this post

இலங்கையை வந்தடைந்த இசைஞானி இளையராஜா! (Video)

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த இசை குழுவினர் நேற்று (24) மாலை இலங்கையை வந்தடைந்தனர்.

கொழும்பில் இன்று (25) இடம்பெறவுள்ள இசை நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே இளையராஜா தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்போது விமான நிலையத்தில் இசைஞானி இளையராஜா, ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,”நான் இசையோடு தான் இலங்கை வந்திருக்கின்றேன்.எங்கு சென்றாலும் என்னிசை இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது.

இலங்கை தமிழர்களில் எனக்கு இரசிகரில்லாமல் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் எனக்கு இரசிகர்கள் தானே.அதுவே எனக்கு போதும். இது கடவுள் கொடுத்த வரம்.” என கூறியுள்ளார்.

Leave a comment

Type and hit enter