50% வீழ்ச்சியடைந்த மீன் விலை!
![](https://oosai.lk/wp-content/uploads/2024/02/fish-586x365.jpg)
மக்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் மீன் விற்பனையில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பெஹலியகொட மத்திய மீன்விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
மீன் விற்பனை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் மீன் விலைகளிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீன் விலை வீழ்ச்சியினால் கடற்றொழிலாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அநேகமான மக்கள் உணவு கொள்வனவினை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் ஜயந்த குரே தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே நாட்டில் மீன் விற்பனையில் பாரியளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.