OOSAI RADIO

Post

Share this post

இசை நிகழ்ச்சி பற்றி மனம் திறந்த கலா மாஸ்டர்!

யாழ்ப்பாண மக்களை யாரும் தவறாக பேச வேண்டாம் என கலா மாஸ்டர் கோரிக்கை முன்வைத்து காணொளி வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிக்கு தென்னிலங்கை பிரபலங்கள் பலரும் யாழிற்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சி இடம்பெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் விழாமேடையை நெருங்கியதால் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.

அந்த சலசலப்பால் சிறிதுநேரம் நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் அன்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு யாழ்ப்பாண மக்களே காரணம் என யாரும் தப்பாக பேசவேண்டாம் என ஊடகங்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக கலா மாஸ்டர் காணொளி வெளியிட்டுள்ளார்.

அதேவேளை யாழில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் இலங்கை ஊடகங்கள் மட்டுமல்லாது இந்திய ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter