OOSAI RADIO

Post

Share this post

இஸ்ரேல் தாக்குதல் – 67 போ் உயிரிழப்பு

எகிப்தையொட்டிய காஸாவின் எல்லை நகரான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்.

மேலும், அந்த நகரிலுள்ள கட்டடத்தில் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டிருந்த 2 பிணைக்கைதளை மீட்டனா்.

இது குறித்து காஸா அதிகாரிகள் கூறியதாவது:

ராஃபா நகரில் இஸ்ரேல் படையினா் திங்கள்கிழமை நடத்திய குண்டுவீச்சில் 67 போ் உயிரிழந்தனா். காஸாவில் கடந்த அக். 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இத்துடன் 28,340 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 12,300 க்கும் மேற்பட்டவா்கள் சிறாா்கள் ஆவா். இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 67,984 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இதற்கிடையே, ராஃபா நகரில் பலத்த பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றில் தங்கள் படையினா் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தி, அங்கு ஹமாஸ் அமைப்பினரால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 பிணைக் கைதிகளை மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. மிட்கப்பட்ட இருவரும் சைமன் மா்மான் (60), லூயில் ஹாா் (70) என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் படையினரின் தரைவழித் தாக்குதலை எதிா்நோக்கியுள்ள ராஃபா நகரில்தான் காஸாவில் வசித்து வந்த 23 லட்சம் பேரில் பாதிக்கும் மேற்பட்டோா் தஞ்சமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அந்த நாட்டின் உத்தரவை ஏற்று தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாக ராஃபா நகரம் திகழ்கிறது.

எனினும், அந்த நகரிலும் அண்மைக் காலமாக இஸ்ரேல் ராணுவம் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், விரைவில் ராஃபாவுக்குள் தரைவழியாக நுழைந்து அந்த நகரைக் கைப்பற்றப் போவதாக இஸ்ரேல் அரசு கூறியது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது. ராஃபாவில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால் அந்தப் பகுதியில் மிகவும் மோசமான பேரழிவு ஏற்படும் என்று அமெரிக்கா மற்றும் ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ராஃபா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 67 போ் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக்டோபா் 7 ஆம் திகதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை கொடூரமாக படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் கடத்திச் சென்றனா்.

Leave a comment

Type and hit enter