உண்மைக் காயத்துடன் நடிக்கும் நடிகை! (படங்கள்)
சின்னத்திரையில் கையில் காயம்பட்டதுபோன்று நடித்துவரும் நடிகை, மீனா செல்லமுத்துவுக்கு உண்மையிலேயே கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் உடன் கோயிலுக்குச் சென்று பதிவிட்டுள்ள படத்தில் கையில் கட்டுடன் இருப்பதைக் கண்டு, ‘அது உண்மைக்காயம்தானா” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வருபவர் நடிகை கம்பம் மீனா. சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவிலும் நடித்துவரும் குணசத்திர பாத்திரங்களில் நடித்துவருகிறார். இதனால், ரசிகர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமானவர்.
தற்போது அவர் நடித்துவரும் தொடரில் கையில் கட்டுடன் நடித்து வருகிறார். அது திரையில் கதைக்காக அப்படி நடித்துவருவதாக பலர் நினைத்திருந்தனர்.
இதனிடையே மகாநதி தொடரில் நாயகியாக நடித்துவரும் நடிகை திவ்யா கணேஷுடன் கோயிலுக்குச் சென்று அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் கம்பம் மீனா பகிர்ந்துள்ளார்.
அதில் கையில் கட்டுடன் காணப்படுகிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில், உண்மையிலேயே கையில் காயம் ஏற்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.