OOSAI RADIO

Post

Share this post

பாடம் கற்பிக்கும் AI ஆசிரியர்!

செய்யறிவு என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல துறைகளிலும் அசாத்திய பாய்ச்சலை உண்டாக்கு என கருதப்படுகிறது.

இந்த நிலையில் நேரடியாக மனிதர்களால் மட்டுமே செய்ய கூடிய வேலைகளையும் திறன்மிகுந்த ஏஐ நிரல் செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பள்ளி, நாட்டிலேயே முதன்முறையாக ஏஐ ஆசிரியரை அறிமுகப்படுத்தியுள்ளது.

மழலையர் வகுப்புகள் முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த ஆசிரியர் பாடம் எடுக்கும் திறன் கொண்டுள்ளதாகவும் மூன்று மொழிகளில் உரையாடக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை உருவாக்கிய மேக்கர் லேப்ஸ் என்கிற நிறுவனம் தெரிவித்துள்ளது.

கேடிசிடி உயர்நிலைப்பள்ளியில் இதனை, விண்வெளி வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் கே. ராஜீவ் தொடங்கி வைத்துள்ளார்.

மேக்கர் லேப்ஸ் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டப்பட்ட விடியோவில் ஏஐ இயந்திர ஆசிரியர் மாணவர்களுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு ‘ஐரிஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். கைகளை அசைத்து பாடம் எடுக்கவும் விளக்கவும் மாணவர்களுடன் உரையாடவும் ஐரிஸால் இயலும் என்கிறார்கள் உருவாக்குநர்கள்.

ஏஐ ஆசிரியருக்கு 4 சக்கரங்கள் இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் நகர இயலும். பாடம் கற்பிக்கும்போது மாணவர்களுக்கு தீங்கிழைக்கும்/ பொருத்தமற்ற வன்முறை, போதை பொருள்கள் தொடர்பான சொற்கள் உச்சரிக்கப்படாதவாறு இதன் செயலியில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கல்வியும் தொழில்நுட்பமும் இணையும் எதிர்காலத் தொழில்நுட்பத்தின் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு மாணவர்களுக்கு புதுவித கற்றல் அனுபவத்தை அளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Maker Labs (@makerlabs_official)

Leave a comment

Type and hit enter