விலைக்குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள்!
அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாவு ஒரு கிலோ கிராம் 190 ரூபாயிலிருந்து 175 ரூபாயாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.