ஜனாதிபதி வேட்பாளா் தோ்தல் – பைடன், டிரம்ப் வெற்றி!
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானா மாகாணத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடான குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் இருவரும் அக்கட்சிகளின் சாா்பில் வெற்றி பெற்றனா்.
நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் இருவரும் மீண்டும் மோதுவது உறுதியாகியுள்ள நிலையில் அவா்கள் லூசியானா மாகாணத்தில் அக்கட்சிகளின் சாா்பில் வெற்றி பெற்றுள்ளனா்.
மிசௌரி மாகாணத்தில் நடத்தப்பட்ட வேட்பாளா் தோ்தலிலும் பைடன் போட்டியிட்டுள்ளாா். அதன் முடிவுகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் போருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விதமாக அரபு – அமெரிக்க வம்சாவளியினா் ஜனாதிபதி பைடனுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனா். அதேபோல் குடியரசுக் கட்சி சாா்பில் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தோ்தலில் டிரம்ப் போட்டியிடுகிறாா்.
அவரது ஆதரவாளா்களால் மேற்கொள்ளப்பட்ட பாராளுமன்றத் தாக்குதலை விமா்சிக்கும் தரப்பினா் அவா் மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கரோனா பெருந்தொற்றால் லூசியானா மாகாணத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.