மாதவனுக்கு திரிஷா கொடுத்த முத்தம் – வைரலாகும் வீடியோ!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதிலும் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் இவர் விஜய், அஜித், சிரஞ்சீவி, கமல் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த திரிஷா, தற்போது Goat திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார். மேலும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா, கமலின் தக் லைப், சிரஞ்சீவின் விஸ்வம்பரா ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
முத்தம் கொடுக்க திரிஷா செய்த விஷயம்
நடிகை திரிஷா திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களில் தனது ஆரம்பகால கட்டத்தில் இருந்து நடித்து வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஆரம்பகால கட்டத்தில் திரிஷா நடித்த விளம்பர ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த ஜூஸ் விளம்பரத்தில் மாதவன் கன்னத்தில் முத்தமிடுகிறேன் என தனது நண்பர்களிடம் பந்தயம் செய்யும் திரிஷா, ஜூஸ் பாட்டிலில் முத்தம் கொடுத்து அதை மாதவிடம் அனுப்புகிறார். அந்த ஜூஸ் பாட்டிலை தனது கன்னத்தில் மாதவன் வைக்கவும், மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் திரிஷா.
இதோ அந்த வீடியோ..
இதெல்லாம் வியந்து பார்த்த விளம்பரம் டா ஒரு காலத்துல OG 🥲 pic.twitter.com/yJUPVGRsXR— ℳર.கௌசி𓃬𝕏 (@koshi_twits) March 17, 2024