OOSAI RADIO

Post

Share this post

நீயா நானா பிரபலம் இரயில் மோதி மரணம்! (வீடியோ)

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை முதல் எபிசோடில் இருந்து தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு என ஒரு தரப்பினரும், தோசை ஒரு சாதாரண உணவு என்றும் கூறுபவர்கள் மறுபுறமும் விவாதம் செய்து வந்தனர்.

இதில் இளம் பெண் ஒருவர் தனது அண்ணன் விதவிதமாக தோசை சாப்பிடுவதை வெறுப்புடன் பேசியிருந்தார். அதற்கு அவரது தான் எதிர்பார்ப்பில் அமர்ந்து தனது மகனுக்கு துணையாக பேச நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றது.

தனது மகன் 20 தோசைக்கும் மேல் சாப்பிடுவான், அதுவும் விதிவிதமாக தான் சாப்பிடுவான் என பேசியிருந்தார். இதை கேட்டவுடன் யாருப்பா அந்த பையன் எனக்கே பார்க்கணும் போல இருக்கே என ஷாக்குடன் கூறியிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் பிரணவ். இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பிரணவ், இரயில் மோதி மரணமடைந்துள்ளார். குரோம்பேட்டை இரயில் நிலையில், கடந்த வாரம் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த 22 வயதாகும் பிரணவ் இரயில் மோதி உயிரிழந்துள்ளார். போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது தன இப்படி நடந்துள்ளது என கூறப்படுகிறது.

Leave a comment

Type and hit enter