OOSAI RADIO

Post

Share this post

சுவிஸ் குடியுரிமையில் புதிய நடைமுறை!

சுவிஸ் குடியுரிமை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சுவிஸ் குடியுரிமை பெற விண்ணப்பிப்பதற்கு முன், சுவிட்சர்லாந்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்று, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும் என சுவிஸ் அரசு அறிவித்துள்ளது.

இந்த விதியானது, வெளி நாட்டவர்களான சுவிஸ் குடிமக்களின் கணவர் அல்லது மனைவிக்கும் பொருந்தும் என சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, சுவிஸ் குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களிடம் ‘settlement’ C permit என்னும் உரிமம் இருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

இந்த விதி, ஐரோப்பிய ஒன்றியத்தாருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதோருக்கும் மாறுபடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter