OOSAI RADIO

Post

Share this post

பாராளுமன்றத்தை உடன் கலைக்குமாறு அழுத்தம்!

பாராளுமன்றத்தை உடன் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடப்படவுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீண்டும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக பொதுஜன பெரமுன நிறுவனர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

ஏதோ வகையில் அவசரமாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து தேர்தல்களுக்கும் தமது கட்சி வேறு எந்த சின்னத்திலும் போட்டியிடாது எனவும், தமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிடும் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter