இரட்டிப்பாக அதிகரிக்கும் விசேட கடமை கொடுப்பனவு
மே மாதம் முதல் விசேட கடமை கொடுப்பனவு இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சுகாதாரத் துறையில் தாதியர் சேவையின் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் சீருடை கொடுப்பனவை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “இலங்கையின் சுகாதார சேவையில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.
நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், இலங்கையில் தாதியர் சேவை மீது அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாமை மிகுந்த மரியாதையுடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.