தாயை கொடூரமாக கொன்ற மகன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!
கனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார்.
தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு கனடாவின் ரொறன்ரோவின் டுன்டாஸ் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
46 வயதான தமது தாய் தன்னை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்தார் என 23 வயதான டலாஸ் லி தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் கத்தியால் குத்தி உயிரிழந்த தாயின் சடலத்தை பல பகுதிகளாக பிரித்து பொலித்தின் பைகளில் இட்டு வீட்டிலிருந்து அகற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல ஆண்டுகளாகவே தமது தாய், தன்னை மிக மோசமாக சித்திரவதை செய்து வந்தார் எனவும் இதனால் தாம் அவரை தாக்கியதாகவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.