OOSAI RADIO

Post

Share this post

யோகி பாபுவின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒரு நாளைக்கு வாங்கு சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தற்போது உச்சத்தில் இருப்பவர் தான் யோகி பாபு. இவர் நடிப்பில் இறுதியாக தமிழில் அரண்மனை 4 வெளிவந்தது.

இப்படத்தில் யோகி பாபுவின் சரளமான நகைச்சுவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து யோகி பாபு கங்குவா, GOAT, அந்தகன், மெடிக்கல் மிராக்கள் ஆகிய படங்கள் நடித்து வருகின்றார்.

ஒரு நகைச்சுவை நடிகராகவும் மறுபக்கம் கதையின் நாயகனாகவும் பட்டையை கிளப்பி வருகின்றார்.அப்படி அவர் நடித்து வெளிவந்த மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து மக்களை தனது நகைச்சுவையால் மகிழ வைத்து வரும் நடிகர் யோகி பாபுவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ. 12 லட்சம் வரை சம்பளம் வாங்கின்றார் என்ற தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a comment

Type and hit enter