திருமண வாழ்க்கை மகிழ்ச்சியா இருக்கணுமா?
பொதுவாகவே அனைவரும் திருமணவாழ்க்கை மகிழ்சியாகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
தங்கள் மனதுக்கு பிடித்தவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கள் சொல்வதை கேட்க வேண்டும் எனவும் நினைப்பது மிகவும் சாதாரணமான விடயம் தான். ஆனால் அவ்வாறான ஒரு துணை கிடைப்பது தான் அசாத்தியமானது.
மனதுக்கு பிடித்தவரை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமான விடயம் கிடையாது ஆனால் அது ஒரு போதும் அதிகாரத்தால் முடியாத காரியம் தான். இதற்கு முதலில் எந்தவிதமான எதிர்ப்பார்ப்பும் அற்ற தூய்மையான அன்பு முக்கியம்.
திருமண வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
எந்த உறவாக இருந்தாலும் உரையாடல் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது. குறிப்பாக திருமண உறவில் பிரச்சினைகள் ஆரம்பிப்பதற்கு மிக முக்கிய காரணமே ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்காததுதான். எனவே திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் துணையுடன் நேரம் செலவிட வேண்டியது அவசியம்.
எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான மனநிலை இருப்பதில்லை. உண்மையில் காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் நிச்சயம் செய்த திருமணமாக இருந்தாலும் திருமணத்துக்கு பின்னரே ஒருவருடைய இயல்பு நிலை வெளிப்படும். இதனை பக்குவமாக புரிந்துக்கொண்டு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
மற்றவர்கள் செய்யும் விடயங்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் வார்தை்தை மூலம் வெளிப்படுத்தும் நாம் திருமண உறவில் அவ்வாறு துணையிடம் வெளிப்படுத்துவது கிடையாது. இது முற்றிலும் தவறு. உங்கள் துணை உங்களுக்காக செய்யும் சிறிய விடயத்துக்கும் பாராட்டும் போதும் நன்றி தெரிவிக்கும் போதும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருமணத்தில் காதல் முக்கியமானது. ஒரு ஜோடியாக உங்களுக்கு எந்த வழியில் வேலை செய்கிறதோ அந்த வழியில் காதலை உயிருடன் வைத்திருப்பது மிகவும் முக்கியம். திருமணமாகி எவ்வளவு காலம் ஆனாலும் காதல் குறையாமல் இருக்க வேண்டும். இந்த விடயத்தில் கவனம் செலுத்தினால் திருமணம் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது.