இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இறுதி பட்டியல் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட உள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் 2 இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடுத்த மாதம் 17 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தீர்மானப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி ஜுலை மாத இறுதியல் ஜனாதிபதி தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அநேகமாக வெளியிடப்படும் என தெற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.