இணையத்தைக் கலக்கும் சமந்தா வீடியோ!
நடிகை சமந்தா வில்லாக வளைந்து அப்படியே பல்டி அடித்து திரும்பி மீண்டும் வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வைரலாகி வருகிறது.
சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா கோலிவுட் டோலிவுட் என தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் அண்ட் ஃபேவரைட் நடிகையாக வலம் வருகிறார். நடிகை சமந்தா, கவர்ச்சியான உடையில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், பிகினி ஷூட்ஸ் என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடான விவாகரத்துத்துக்கு பிறகு, நடிகை சமந்தா சுதந்திரமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
நடிகை சமந்தா மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். மயோசைட்டிஸ் நோயில் இருந்து தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்காக சமந்தா ஜிம்களில் வொர்க் அவுட் செய்து வருகிறார். அப்படி வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
நடிகை சம்ந்தா சமீபத்தில் வெளியிட்ட ஒர்க் அவுட் வீடியோ ரசிகர்களை வியக்க வைத்து சோசியல் மீடியாவையே கலக்கி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சமந்தா உடலை வில்லாக வளைத்து யோகா செய்வது போல செய்து, அப்படியே பல்டி அடித்து, திரும்பி மீண்டும் உடலை வில்லாக வளைத்து வொர்க் அவுட் செய்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி சமந்தா வொர்க் அவுட் வீடியோவை பகிர்ந்து வருவதால் வைரலாகி வருகிறது.