150 கோடியில் தனுஷ் பங்களா – என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ராயன் என்ற படத்தினை இயக்கி நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேடையில் ஏறி பேசியும் பாடல் பாடியும் தன்னுடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நடிகர் தனுஷ். இதற்கிடையில் சினிமா நட்சத்திரங்களுக்கு எது நடந்தாலும் சரி, அதிலும் விவாகரத்து நடந்தாலும் சரி அதற்கு காரணம் தனுஷ் தான் என்று கூறும் அளவிற்கு யூடியூபர்கள் பேச ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்நிலையில் ராயன் ஆடியோ லான்சில் பேசிய நடிகர் தனுஷ், நான் யாருன்னு எனக்கு தெரியும். என்னை படைத்த அந்த சிவனுக்கும் என் அப்பா, அம்மாவுக்கும் என் பசங்களுக்கும் என் ரசிகரக்ளுக்கும் தெரியும் என்று தன்னை பற்றி பின்னாடி பேசுபவர்கள் பற்றியும் முதுகில் குத்துபவர்கள் பற்றியும் பேசியிருக்கிறார்.
மேலும் ரஜினி, விஜய் குட்டி ஸ்டோரி சொல்வது போல போயஸ் கார்டனில் ஏன் பல கோடியில் வீடு வாங்கி கட்ட ஆசைப்பட்டேன் என்ற ரகசியத்தை மேடையிலேயே ரசிகர்கள் முன் போட்டுடைத்திருக்கிறார். தலைவர் வீட்டை பார்க்க போயஸ் கார்டன் சென்ற போது போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தார்கள்.
அவர்களிடம் தலைவர் வீடு எங்கே என்று கேட்டதற்கு அங்கதான் இருக்கும் சைலண்ட்டா பார்த்துவிட்டு கிளம்பிடனும் என்று சொன்னார்கள். அப்படியே நானும் தலைவர் வீட்டை பார்த்துவிட்டு சந்தோஷமாக திரும்பினேன். ஆனால் அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம், அது யாரு வீடுன்னு கேட்டால், ஜெயலலிதா அம்மா வீடுன்னு சொன்னார்கள்.
அப்படியே வியந்து போய், இந்த பக்கம் ரஜினி சார் வீடு, அந்த பக்கம் ஜெயலலிதா அம்மா வீடு, நடுவில் நம்ம வீடு கட்டினா எப்படி இருக்கும் என் நினைத்தேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார். அவர் அப்படி சொன்னதும் அரங்கில் இருந்த தனுஷ் ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்துவிட்டனர்.