Facebook இல் பாரிய மோசடி – சிக்கும் இலங்கையர்கள்!
இலங்கையில் அண்மைய நாட்களில் முகநூல் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்தாவது,
தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, அந்த பணம் இரட்டிப்பாக தங்களது வங்கிக் கணக்கில் திரும்பச்செலுத்தப்படும் என்றும் மோசடிக்காரர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அதிகளவு பணம் முதலீடு செய்யப்பட்டு 4 மடங்கு திரும்பக் கிடைக்கும் என்றும் தகவல் வழங்கப்பட்டு இந்த மோசடி இடம்பெறுகின்றது.
இந்த பணமோசடி நைஜீரியா போன்ற வெளிநாடுகள் ஊடாக இடம்பெறுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குறித்த மோசடி சம்பவத்தில் வர்த்தகர்கள், பொறியியலாளர்கள் போன்றவர்களே சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.