OOSAI RADIO

Post

Share this post

கொலைக்கான காரணம் வெளியானது!

கொழும்பு – அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட பிரபல வர்த்தகரான ‘கிளப் வசந்த’ என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் சடலம் பொரளையில் உள்ள மலர்சாலை ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உடலை அங்கு வைக்க வேண்டாம் என ஜயரத்ன மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறக்க கடந்த 8ஆம் திகதி சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கிளப் வசந்தவின் சடலம் நேற்று (12ஆம் திகதி) ஜயரத்ன மலர்சாலையில் இறுதிச் சடங்குகளுக்காக ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், நேற்றிரவு கஞ்சிபானி இம்ரான் என கூறிக்கொண்ட நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த மலர்சாலையை அச்சுறுத்தியுள்ளார்.

அதன்படி பொரளை பொலிஸாரின் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், மலர்சாலைக்கு அருகில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றிரவு இனந்தெரியாத நபர் ஒருவர் ஜயரத்ன மலர்சாலைக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கஞ்சிபானி இம்ரான் வழங்கிய அறிவித்தல் தொடர்பில் வசந்தவின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டதா என வினவி அச்சுறுத்தியுள்ளார்.

இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றையதினம் காலை கிளப் வசந்தவின் சடலம் ஜயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதேவேளை, மாக்கந்துரே மதுஷை கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கிய முதல் நபராக கிளப் வசந்த கொல்லப்பட்டதாக கஞ்சிபானி இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுஷ் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபானி இம்ரான் கூறியதாக கூறப்படுகிறது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில், பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Leave a comment

Type and hit enter