OOSAI RADIO

Post

Share this post

வீட்டில் செல்வம் பெருக கற்றாழை!

கற்றாழைச் செடியில் உள்ள மருத்துவக் குணங்கள் காரணமாக பலரும் அதை தங்கள் வீடுகளில் வளர்க்க விரும்புகின்றனர். கற்றாழை வாஸ்து தோஷத்தை நீக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

கற்றாழையின் பயன்பாடு முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது.

வீட்டில் வைக்கப்படும் பொருள் வாஸ்து படி இருந்தால் தான் நேர்மறை ஆற்றல் பரவுமாம். அப்படி தான் கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு எந்த திசையில் வைத்தால் என்ன பலன் என நாம் இங்கு பார்ப்போம்.

கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடக்கூடாது. கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால், உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து, வீட்டில் சச்சரவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

பொதுவாக காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் கற்றாழை செடியை பார்ப்பது நல்லதல்ல. உங்கள் படுக்கையறையில் கற்றாழை செடியை நட்டால், காலையில் இந்த செடியைப் பார்ப்பது உங்கள் வழக்கத்தைக் கெடுத்துவிடும்.

படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பது குடும்ப வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் குடும்பத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுகிறது.

Leave a comment

Type and hit enter