OOSAI RADIO

Post

Share this post

ஜனாதிபதி தேர்தல் தினம் தொடர்பான செய்தி!

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியல் யாப்புக்கு அமைய அனைவருக்கும் பொருத்தமான நாளொன்று தெரிவு செய்யப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத்திற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள சட்ட நிலவரப்படி செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கு ஒரு திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதற்கிடையில், சமீபத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த தேர்தல் ஆணையம், ஒக்டோபர் 16 ஆம் திகதி அல்லது 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஏதேனும் ஊழல் அல்லது சட்ட மீறல்கள் காரணமாக சில வாக்களிப்பு நிலையங்களின் தேர்தலை இரத்துச் செய்ய நேர்ந்தால், அந்த வாக்களிப்பு நிலையங்களில் மீண்டும் தேர்தலை நடத்தி, இறுதி முடிவை வெளியிட சுமார் 15 நாட்கள் ஆகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, கணக்கிட்டால், ஒக்டோபர் 10 முதல் 14 நாட்கள் (இரண்டு வாரங்கள்) ஒக்டோபர் 2 ஆம் திகதியாகிவிடும். சட்டரீதியாக கூறப்படாவிட்டாலும், ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமாக சனிக்கிழமையன்று நடைபெறுவதால், ஒக்டோபர் 2 ஆம் திகதிக்கு முன்னர் உள்ள சனிக்கிழமை செப்டம்பர் 28ஆம் திகதியாகும். எனவே ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி நடைபெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Type and hit enter