OOSAI RADIO

Post

Share this post

கணவன் குளிக்கமாட்டார் – விவாகரத்து கோரிய மனைவி!

இந்தியாவின் உத்தரபிரதேசம் ஆக்ராவை சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில் கணவரின் ஒழுங்காக குளிப்பதில்லை என விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கணவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே குளிக்கிறார். இதனால் அவர் மீது பொறுத்துக்கொள்ள முடியாத உடல் துர்நாற்றம் வீசுகிறதாக கூறி பெண் விவாகரத்து கோரியுள்ளார்.

பெண்ணின் கணவரான ராஜேஷ் புனிதமான கங்கை நதியில் (கங்காஜல்) வரும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை தெளித்துக் கொள்கிறார். அதேவேளை மனைவியின் வற்புறுத்தலால் 40 நாட்களில் 6 முறை குளித்துள்ளாராம் மாப்பிள்ளை.

இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மணமகள் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இறுதியில் கணவர் மனந்திருந்தி, அவரது தனிப்பட்ட சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டபோதும், பெண் கணவருடன் இனி வாழ விரும்பவில்லை என கூறியதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

Leave a comment

Type and hit enter