குப்பி விளக்கால் மூதாட்டி ஒருவர் பலி!
யாழில் குப்பி விளக்கின் மூலம் உடலில் தீப்பற்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளாலி, எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய நிக்லாஸ்பிள்ளை வல்லமரி என்ற 9 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி குறித்த மூதாட்டி வெளியே செல்வதற்கு குப்பி விளக்கினை பயன்படுத்திய போது அவர்மீது தீப்பற்றியுள்ளது.
இதையடுத்து, அவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(17) உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.