50% விலை உயர்ந்த வெற்றிலை!
60 ரூபாவாக இருந்த வெற்றிலை தற்போது 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.
வெற்றிலை உற்பத்தி இல்லாததன் காரணமாக விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக, வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஒரு வெற்றிலை 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையில் விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில நாட்களாக பாக்கு ஒன்று 15 ரூபா தொடக்கம் 20 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது மூன்று ரூபாவாக குறைந்துள்ளது.
வெற்றிலை விலை அதிகரிப்பு இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடரலாம் எனவும் அதன் பின்னர் வழமைக்கு திரும்பும் எனவும், வெற்றிலை 50 ரூபா தொடக்கம் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம் எனவும் வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.