OOSAI RADIO

Post

Share this post

ரணில் நிறைவேற்றிய சட்டம் காலாவதியானது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் தொடர்பான சட்டம் காலாவதியாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்திருந்தால் மாத்திரம் ஓய்வூதியம் வழங்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய சட்டம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

அதற்கான முன்மொழிவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்திருந்தார். ஆனால் குறித்த முன்மொழிவு மசோதாவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக இதுவரை நிறைவேற்றிக் கொள்ளப்படவில்லை.

எனினும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தைக் கலைத்தவுடன் குறித்த சட்டமூலம் வலுவிழந்து விட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி சேனாதீர தற்போது அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் முன்னைய ஓய்வூதிய சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் அங்கத்துவம் வகி்த்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter