வாகனங்கள் தொடர்பில் மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்!
அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் அறிந்திருந்தால் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக அரசாங்கத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ சில இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சிதைவடைய இடமளிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அறிவிக்குமாறு கோரிகை விடுத்திருந்தனர்.
மேலும் குறித்த தொலைப்பேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் எனவும்,தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.