UNP உடன் இணைந்து செயற்பட தயார்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி தயார் என கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் நாடு திரும்பியதும் அவருடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து வலதுசாரி அரசியல் சக்திகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அவர் கோரியுள்ளார்.
இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், பிளவுகளை களைந்து முன்னோக்கி வருமாறும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இருப்பதாகவும், ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
Courtesy: Sivaa Mayuri