அர்ச்சுனாவின் அதிரடி அறிவிப்பு!
நான் வடக்கு மாகாணத்தை பிடித்த தொற்றை ஒன்றை இதற்கு முதல் இருந்த அரசாங்கத்திலே கண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,
அந்த அரசாங்கத்தில் இனவாதம் இருந்தது, எங்களை பிளவுபடுத்தி பிரித்து எங்களை தமிழர்களாக ஆட்சி செய்தார்கள்.
அநுர குமார அரசாங்கம் இதுவரை எதையும் செய்யவில்லை, வடக்கை பிரதிநிதித்துவம் செய்வதனால் அதை நான் பெருமிதத்துடன் சொல்ல விரும்புகிறேன்.
தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே தேசிய மக்கள் சக்தி கட்சியினால் மூன்று பேர் தெரிவு செய்து இருக்கிறார்கள்.
வடக்கிலே எங்களிடையே பொய் செய்கின்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்து சுயாதீன குழுக்களில் போட்டியிட்ட எங்களை மக்கள் தெரிவு செய்து இருக்கிறார்கள்.
ஆகவே, இந்த அரசாங்கம் எங்களுக்கு எப்போதும் செய்யாது என்று சொல்லி மக்கள் எங்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.
இவர்கள் இனவாத அடிப்படையில் செயற்படுகிறார்கள் எனக்கு இடம் அளியுங்கள் கௌரவ உறுப்பினருக்கு கதைக்க இடம் அளியுங்கள்.
இன்னுமொரு விடயத்தை நான் சொல்ல வேண்டும், எதிர் கட்சி தலைவர் அலுவலகத்தில் என்னை தாக்கினார்கள் நான் வைத்தியர் சிறு பிள்ளை போல பேச விரும்பவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறியுள்ளார்.