இலங்கையில் வரி செலுத்தாத கார்கள் கண்டுபிடிப்பு
சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதும் உள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது.
அதற்கமைய, விசாரணையின்படி, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சுங்க வரி மற்றும் இதர கட்டணங்களை வசூலிப்பதற்காக குறித்த கார்கள் சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை சரிபார்க்க சுங்கத் திணைக்களம் சமீபத்தில் ஒரு ஆன்லைன் வழிமுறையை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் ஒரு காரை வாங்குவதற்கு முன் இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் சரியாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க முடியும் என்று இலஞ்ச ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.