OOSAI RADIO

Post

Share this post

இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (16) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.

அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment

Type and hit enter