OOSAI RADIO

Post

Share this post

இந்த திகதிகளில் பிறந்தவரா – 2025 இல் ராஜ வாழ்க்கை!

தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறையாக எண்கணித ஜோதிடம் திகழ்கின்றது.

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும்.

எண் கணித சாஸ்திரம் எனப்படுவது ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.

எண்களால் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எண்கணித சாஸ்திரம் உறுதியாக கூறுகின்றது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கணிபின் அடிப்படையில் எந்தெந்த விதி எண்களை கொண்டவர்கள் புதிய ஆண்டில் ராஜ வாழ்க்கை வாழப்போகின்றார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.

எண் 2

எண் கணித ஜோதிடத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு 2 ஆம் எண்ணை விதி எண்ணாக கொண்டவர்களுக்கு வாழ்வில் பல்வேறு வகையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருமண வாழ்வில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும்.

கடந்த கால தவறுகளில் இருந்த பாடம் கற்றுக்கொண்டு எதிர்காலத்தை செம்மைப்படுத்தும் சிறந்த ஆண்டாக இது அமையும். குறிப்பாக உங்கள் தவறுகளை உணரும் வாய்ப்பு கிடைக்கும்.

நிதி நிலையில் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக வளர்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கிம் சீராக இருக்கும். இலக்கை நோக்கி வெற்றிநடை போடுவதற்கான வாயப்பு அமையும்.

எண் 4

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அமோகமான சாதக பலன்களை கொடுக்கும். இவர்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தையும் இந்த ஆண்டில் நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.

வருகின்ற ஆண்டு மகிழ்ச்சியையும் ஆடம்பரத்தையும் முழுமையாக அனுபவிக்கும் யோகம் ஏற்படும். தொழில் ரீதியில் நன்மையான பலன்கள் கூடிவரும். வியாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

ராகுவின் தாக்கத்தால் உடல் நிலையில் சில அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது. இதனால் உணவு முறையில் சற்று கவனமான இருக்க வேண்டும்.

குரு மற்றும் சுக்கிரனின் ஆசியால் நிதி நிலையில் 2025 ஆம் ஆண்டு அசுர வளர்ச்சி ஏற்படும்.

எண் 5

5 ஆம் எண்ணை விதி எண்ணாக கொண்டவர்கள் 2025 இல் தொழில் ரீதியில் தீவிர வளர்ச்சியை சந்திக்கப்போகின்றார்கள்.

இவர்களின் நீண்ட நாள் கடின உழைப்புக்கு இந்த ஆண்டில் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். வாழ நினைத்த வாழ்வை மகிழ்ச்சியாக இந்த ஆண்டில் வாழ்வார்கள்.

குறிப்பாக எண் 5 இல் பிறந்த பெண்களுக்கு நிதி நீதியில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆண்களுக்கு உயர் பதவியில் அமரும் வாய்ப்பு அமையும். மொத்ததடதில் இந்த எண்களில் பிறப்பெடுத்தவர்கள் ராஜ வாழ்ககை வாழப்போகின்றார்கள்.

Leave a comment

Type and hit enter