OOSAI RADIO

Post

Share this post

2025 இல் யாருக்கு எல்லாம் திருமணம் நடக்கும்?

திருமணம் என்பது ஒருவரின் தலைவிதியை மாற்றும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

திருமண வாழ்க்கை பற்றிய தகவல்களை யாராலும் கணிக்க முடியாது. திருமணம் நாம் எப்போது விரும்பும் போது அது நடக்காது. ஆனால் சில சமயங்களில் எதிர்பார்க்காத நேரத்தில் திருமணம் நடக்கும்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் சிலருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது, சிலருக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

2025 ஆம் ஆண்டு கணிப்புகளின் படி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

திருமணம் செய்யப்போகும் நட்சத்திரங்கள்

அஸ்வினி – கேது பகவான் அஸ்வினி நட்சத்திரத்தை ஆட்சி செய்கிறார். இதனால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். பிறக்கப்போகும் 2025 ஆம் ஆண்டில் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படும். அவர்களின் விருப்பத்திற்கமைய திருமணம் நடக்கும். அவர்கள் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் மற்றும் நெருக்கம் இருக்கும்.

ரோகிணி – ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரக பெயர்ச்சி காரணமாக புது வருடத்தில் சாதகமான மாற்றங்களை அனுபவிப்பார்கள். திருமணம் எப்போது என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் திருமணம் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். வாழ்வில் இன்னும் ஏகப்பட்ட மாற்றங்களை அனுபவிக்கப்போகிறீர்கள்.

மிருகசீரிஷம் – எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் விருப்பம் படி திருமணம் நடக்கும். இந்த நட்சத்திரத்தை செவ்வாய் கிரகம் ஆட்சி செய்யும். 2025 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணத்திற்கு உகந்த ஆண்டாக அமையும். திருமணத்துடன் இணைந்து அனைத்து விடயங்களும் நல்லதாகவே நடக்கும்.

பூசம் – பூசம் நட்சத்திரம் சனிபகவானால் ஆளப்படுவதால் இவர்களுக்கும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும். குடும்பத்தின் மீதான அர்ப்பணிப்பு, அன்பு, நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்கள் திருமண வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.

உத்திரம் – உத்திரம் நட்சத்திரத்தை சூரியன் ஆள்கிறார். இவர்கள் இயற்கையாகவே பொறுப்பானவர்களாக இருப்பார்கள். திருமணம் விடயத்தில் இவர்கள் மற்றவர்களை விட வித்தியாசமானவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக வாழும் நட்சத்திரங்களாக இருப்பார்கள்.

Leave a comment

Type and hit enter