மீண்டும் சிக்கிய அஜித் – விடியோவை நீக்கியது ஏன்?
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய விடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஒரு விடியோ வைரலாகியுள்ளது. அதில் ரசிகர் ஒருவரின் செல்போனை பறி்த்து அவர் எடுத்த விடியோக்களை நீக்கியுள்ளார். ஆனால் அஜித்குமார் செய்ததையே இன்னொருவர் விடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
எப்போதும் ரசிகர்களுக்கு புகைப்படங்கள் எடுக்க நேரம் ஒதுக்கும் அஜித்குமார் இப்படி செய்வதில் எதாவது நியாயம் இருக்குமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மதிப்பளிக்க வேண்டுமென ஒரு தரப்பினரும், நடிகர் அஜித் குமார் செய்தது தவறெனவும் மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இதுமாதிரி நடிகர் சிவகுமார் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது செல்போனை தட்டிவிட்டது பேசுபொருளானது.