அத்தியாவசிய பொருட்களின் விலை 46% அதிகரிப்பு
ஒரு வருடத்திற்குள் அத்தியாவசிய பொருட்களின் விலை 46 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்த நாட்டில் பொருட்களின் விலை தொடர்பில் சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மூன்று மரக்கறிகள், இரண்டு வகையான அரிசி, சீனி மற்றும் ஒரு வகை மீன் மற்றும் இரண்டு வகையான பழங்கள் அடங்கிய ஒரு பையின் விலை பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் அறிக்கைகள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் மற்றும் வெளிச்சந்தையில் உள்ள தினசரி சில்லறை விலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உரிய கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த பொருட்கள் அடங்கிய ஒரு பையின் விலை 7,176 ரூபாயாகும். இந்த ஆண்டு ஜனவரியில் அந்த பையின் விலை 10,454 ரூபாயாக 3,278 ரூபாயில் அதிகரித்துள்ளது.