மாணவன் தற்கொலை – விடுதிக்கு சீல்!
நீட் மாணவன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ராஜஸ்தான் கோட்டாவில் மாணவர் தங்கியிருந்த விடுதிக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவர் கோட்டா நகரில் கஞ்சன் விடுதியில் தங்கி படித்து வந்தார். ஜன.23 அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
விடுதியின் அறையில் தற்கொலை செய்துகொள்ள இயலாத வகையிலான மின்விசிறிகள் பொருத்தப்படவில்லை. இது மாணவர்களின் பாதுகாப்புக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும் எனத் தெரிவித்து விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
விடுதி அறையில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கு, கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோட்டா மாவட்ட ஆட்சியர் ரவீந்திர கோஸ்வாமி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.